கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்

கும்பகோணம், ஏப்.17: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மதுபான கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் பாலா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. அதனையடுத்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் மக்கள் அதிகமாக கூடுகிற கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று இரண்டாவது அலையை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் பல்வேறு கோயில்களில் தேரோட்டம் மற்றும் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. கடந்த வருடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுகின்ற இடமாக இருந்த மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டன. எனவே அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சில்லறை விற்பனை நேரத்தை குறைத்திட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>