திருநாவுக்கரசர் எம்பி கோரிக்கை இலுப்பூரில் லாரி மோதி மின்கம்பம் உடைந்தது

இலுப்பூர், ஏப்.17: இலுப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி நிலை தடுமாறி மின் கம்பங்களை உடைத்து சேதப்படுத்தியதில் இலுப்பூரில் நேற்றுமுன்தினம் ஒருநாள் முழுவதும் சில பகுதியில் மின் தடைஏற்பட்டது. காங்கேயத்தில் இருந்து ஜல்லி கற்களைஏற்றி வந்த லாரி நேற்று காலை 6 மணிஅளவில் நிலைதடுமாறி இலுப்பூர் காவல் நிலையம் அருகே இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தது. லாரி மின் கம்பத்தை உடைத்து 100 மீட்டர் வரை இழுத்து சென்றதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் இப்பகுதியில் நேற்று காலை 6 மணிமுதல் சில பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடி கீரமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் பாரதிராஜா அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>