காரைக்கால் பிகே சாலையில் அறுந்து தொங்கிய மின் வயர்

காரைக்கால். ஏப். 17: காரைக்கால் பிகே சாலையில் மின் இணைப்பு வயர் அறுந்து நடுரோட்டில் தொங்கியது. இதனை உடன் சரிசெய்யாத மின் ஊழியர்களின் அலட்சியப்போக்கை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். காரைக்காலில் முக்கிய சாலைகளில் ஒன்று பி.கே சாலை. நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. காரைக்கால் பேருந்து நிலையம் செல்லவும், அங்கிருந்து சிதம்பரம், புதுச்சேரி ,சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவும் ,காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் வருவதற்கும் இந்த சாலை பயன்படுகிறது.

இந்த சாலையின் ஒரு புறத்தில் உள்ள மின் கம்பங்களில் இருந்து சாலையை கடந்து எதிர்புறம் உள்ள கம்பங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பிலிருந்து மின்சார ஒயர் ஒன்று அறுந்து சாலையின் நடுவில் தொங்கியது .இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் அச்சமடைந்தனர். இதுகுறித்து மின் துறைக்கு தெரிவித்தும் பல மணி நேரமாக அந்த ஒயர் சரிசெய்யாமல் நடு ரோட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. மக்களின் உயிர் மீது மின் துறையினர் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Related Stories:

More
>