கரூர் சட்டமன்ற ெதாகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக அறை வேண்டும்

கரூர், ஏப்.17: கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலெக்டர் அலுலவகத்திற்கு வந்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். பின்னர் இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், கரூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மே 2ம்தேதி அன்று தளவாபாளையம் குமாரசாமி கல்லூரியில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 2 அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, கூடுதலாக ஒரு அறை ஒதுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

Related Stories:

>