விருதுநகரில் ஆலங்கட்டி மழை

விருதுநகர், ஏப். 17: விருதுநகரில் கடந்த 14ம் தேதி துவங்கி நேற்று வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6.15 மணி முதல் 7 .15 வரை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இடையிடையே ஆலங்கட்டிகள் விழுந்தது. கன மழையை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால்,விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு 7.50 மணி வரை இருள் சூழ்ந்தது.நேற்று மாலை பெய்த ஒரு மணி நேரம் மழையால் விருதுநகர், பாண்டியன் நகர், சூலக்கரை, சத்திர ரெட்டியபட்டி பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகரின் தாழ்வான பகுதிகளான பழைய பஸ் நிலையம், ரயில்வே பீடர் ரோடு, சாத்தூர் ரோடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. அதேபோல் வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

Related Stories:

>