பரமக்குடியில் விடைத்தாள் தைக்கும் பணி தொடக்கம்

பரமக்குடி, ஏப்.17: பரமக்குடி தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி அனைத்து பள்ளிகளிலும் துரிதமாக நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மே 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. அதையொட்டி, அந்த தேர்வுக்குரிய விடைத்தாள்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். அதில், மாணவர்களின் முகப்பு சீட்டுடன் இணைத்து விடைத்தாள் தைக்கும் பணி துவங்கியது. அதில் மாணவர்களின் பெயர், புகைப்படம், தேர்வு எண், தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படுகிறது. பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான விடைத்தாள் தைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் அஜ்மல் கான்  மேற்பார்வையில் விடைத்தாள் தைக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும்  ஈடுபட்டனர்.

Related Stories:

>