மதுரையில் தினசரி எகிறும் கொரோனா மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க கோரிக்கை

மதுரை, ஏப். 17: மதுரை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 167 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி கூறும்போது, ‘மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 550 படுக்கைகள் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, 3வது மாடியில் புதிய கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு உள்ளது. அரசு மருத்துமவனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை. தேவைக்கேற்ப ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன’’ என்றார்.

மதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன் குமார் கூறும்போது, ‘நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட ‘கோவிட் கேர்’ சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரவல் அதிகரிப்பை பொறுத்து, மேலும் சில இடங்களில் ‘கோவிட் கேர்’ மையம் திறக்கப்படும். மாவட்டத்தில் தினசரி 2,500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது’ என்றார். மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதை போல டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>