பாஜவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப். 17: மதுரையில் பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் மதுரை தல்லாகுளத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர், ‘அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை துரதிஷ்டவசமானது’’ என்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் அம்பேக்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது விசிகவினருடன் பாஜவினர் மோதிய சம்பவம் நடந்தது. இதைக் கண்டிக்கும் வகையில், நேற்று பாஜவினர் காவல் துறையினருக்கு எதிராகவும் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>