ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பட்டிவீரன்பட்டி, ஏப். 17: பட்டிவீரன்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தமிழ் புது வருடப்பிறப்பை முன்னிட்டு சித்திரை விசு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பரிவார தெய்வங்களான விநாயகர், காசிவிஸ்வநாதர், பாலமுருகன், மகாவிஷ்ணு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகளை குருசாமிகள் செய்தனர். பின்னர் கொரோனா பரவாமல் மக்கள் நலமுடன் வாழவும், உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஐயப்பனுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரை விசுவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை, பக்தர்களுக்கு கை நீட்டமாக 1 ரூபாய் நாணயம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related Stories:

>