குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பு இடங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

குஜிலியம்பாறை, ஏப். 17: தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் எதையுமே கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி, பாளையம் பேரூராட்சி பகுதிகளில் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடுகம்பாடி ஊராட்சி அரண்மனையூரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமையில் சுகாதாரத்துறையினர் அரண்மனையூர் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். \அங்குள்ள வீடுகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், வயது வாரியாக கணக்கெடுப்பு செய்தும், கர்ப்பிணி பெண்கள் யாராவது உள்ளனரா என கண்டறிந்தும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என கணக்கீட்டும் தடுப்பூசி போடும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், பிடிஓக்கள் மணிமுத்து, ஊராட்சி தலைவர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>