பூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து

ஊட்டி, ஏப். 17: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ராஜூ கூறியதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடுவானத்திற்கு நேர் செங்குத்தான உச்சியில் (பகுதியில்) சூரியன் வரும் போது, இவ்வாறு நிழல் இல்லா நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வு அனைத்து இடங்களிலும நிகழாது. 23.5 மற்றும் மைனஸ் 23.5 அட்சரேகை கொண்ட பகுதியில் மட்டும் ஏற்படும். ஒரு இடத்தில் அட்சரேகையும், சூரியனின் சாய்வு கோணமும் சமமாக இருக்கும் போது மட்டும் பூஜ்ய நிழல் தோன்றும். சூரியனின் சாய்வு கோணம் என்பது சூரியனினின் சுற்றுவட்ட பாதைக்கும் பூமத்திய ரேகைக்கும் இடைப்பட்ட கோணம் ஆகும். பூஜ்ய நிழல் விழும் சமயத்தில் சூரியன் ஒரு இடத்தில் அட்சரேகை கோட்டை கடக்கும் சமயத்தில் சூரியனின் கதிர்கள் நேர் செங்குத்தாக விழும். எனவே, நிழல் அங்கு தோன்றாது. வரும் 19ம் தேதி கோத்தகிரியில் அட்சரேகை வடக்கு 11.42 டிகிரியிலும், கிழக்கே 76.86 டிகிரியிலும் சூரியனின் சாய்வு கோணம் இருக்கும். எனவே, பூஜ்ய நிழல் கோத்தகிரியில் ஏற்படும். இந்நிகழ்வு மற்ற இடங்களில் இருக்காது. இதனால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதில், மூட நம்பிக்கைக்கும் இடமில்லை, என்றார்.

Related Stories:

More