குளித்தலையில் இன்று ஒருநாள் கடையடைப்பு

குளித்தலை, ஏப்.16: குளித்தலை நகர மருத்துவர் நல சங்க தலைவர் அசோக் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மருத்துவர் சமூக மக்களையும், முடிதிருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ள மண்டேலா என்ற திரைப்படத்தை தயாரித்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்களை கண்டிக்கிறோம். அரசு இதுபோன்று சமுதாய, தொழில் ரீதியாக யாரையும் இழிவுப்படுத்தி திரைப்படங்கள் வெளியிடுவதை தடை செய்ய நடவடிக்கை வேண்டும். இதனை வலியுறுத்தி மாநில மருத்துவ நல சங்கம் ஒரு நாள் கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்து அறிவித்துள்ளது. அதன்படி குளித்தலை நகரத்தில் அனைத்து சங்க உறுப்பினர்களும் இன்று (16ம் தேதி) ஒருநாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>