பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள்

கரூர், ஏப்.16: கரூர் தாந்தோணிமலை பெருமாள் கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் பிரசித்து பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோயில் எதிரே தெப்பக்குளம் உள்ளது. ஆண்டு தோறும் மாசி மகத் தெப்ப தேரோட்டம் இந்த குளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தெப்பக்குளத்தில் அதிகளவு தண்ணீர் உள்ளதோடு, பாசிகளும், செடி கொடிகளும் புதர் போல வளர்ந்துள்ளன. எனவே இதனை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>