×

முக கவசம் அணியாமல் வந்த பஸ் பயணிகளுக்கு அபராதம்

நாகை, ஏப்.16: நாகையில் பஸ்களில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றும், அதனால் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முககவசம் அணியாமல் வருவோர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. நகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஷாப்பிங்மகால், ஓட்டல்கள், தேநீர் கடைகளில் ஆய்வு செய்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் நேற்று முதல் வருவாய்த்துறையினர் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உதவியுடன் பஸ்களை நிறுத்தி முககவசம் அணியாமல் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர், நடத்துனர் ஆகியோருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் நாகை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் அதிரடியாக பஸ்களை ஆய்வு செய்து பயணிகளுக்கு அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். இதை தவிர டூவீலர்களில் முககவசம் அணியாமல் வந்தாலும் வருவாய்த்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...