சீர்காழியில்  நிவாஸ் காபி கபே திறப்பு விழா

சீர்காழி, ஏப்.16: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்டேட் பேங்க் எதிரில் நிவாஸ் காபி கபே கடை திறப்பு விழா நடைபெற்றது. சீனிவாசா குழும பங்குதாரர்கள் பாலாஜி, கோபாலகிருஷ்ணன் புதிய கடையை திறந்து வைத்தனர். பங்குதாரர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எழிலரசன் -சந்திரா தம்பதியினர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தினந்தோறும் கடையில் சுவையாக இட்லி, சோலா பூரி அடை, பொங்கல், வடை, கேசரி, சாம்பார் சாதம், காளான் பிரியாணி, புளிசாதம், டீ காபி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீர்காழி ரோட்டரி டெம்பிள் டவுன் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ஆசிரியர் சொர்ணபால், வீரபாண்டியன், குமார், உமா மெட்டல் பாலமுருகன், சிவசக்தி மெட்டல் ஆறுமுகம், பொன்மாரி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாலாஜி வெங்கட பாலன் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Related Stories:

>