தஞ்சைக்கு மீன்லோடு ஏற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த டிரைவர் மாரடைப்பால் பரிதாப சாவு

தஞ்சாவூர், ஏப்.16: தஞ்சைக்கு லாரியில் மீன்லோடு ஏற்றி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் மாரடைப்பால் பலியானார். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாண்டு (32). இவர் ஆந்திரா மாநில துறைமுகத்தில் இருந்து தஞ்சைக்கு லாரியில் மீன் லோடு ஏற்றி கொண்டு வந்தார். பின்னர் தஞ்சை கீழவாசல் மார்க்கெட் வெளியே லாரியை நிறுத்தி மீன்லோடுகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாண்டுவை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் பாண்டு இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>