குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர், ஏப்.16:திருப்பூர் குமரன் ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வடக்கு போக்குவரத்து போலீசார், குமரன் ரோட்டில் உள்ள நீதிமன்ற சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வரை ஒரு புறத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். தற்போது, இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு குமரன் ரோட்டின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், மீண்டும் கடுமையான போக்குரத்து நெரிசல் ஏற்ட்பட்டு வருகிறது. இதை போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>