அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளிகள் அலைக்கழிப்பு

விருதுநகர், ஏப்.16: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிடி ஸ்கேன் மையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் ஸ்கேன் எடுக்க வந்து செல்கின்றனர். முதல் நாள் ஸ்கேன் எடுக்கும் நோயாளிக்கு மறுநாள் மதியம் 12 மணிக்கு மேல் ஸ்கேன் ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. ஸ்கேன் ரிப்போர்ட் பெற்று மருத்துவரிடம் காட்ட சென்றால் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி முடிந்து சென்று விடுவதாகவும், டாக்டரை பார்க்க 3வது நாள் வரவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு நபர் சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தால் 3 நாள் அலைந்து நோயின் தன்மை அறிய வேண்டிய நிலையும், அதன்பின்பே சிகிச்சை பெறும் நிலை இருக்கிறது.

விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சி.டி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் நோயாளிகளுக்கு முடிவுகள் உடனே கிடைக்கவும், அன்றைய தினமே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பதற்கான செய்ய வேண்டும் என நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஸ்கேன் எடுக்க வருகிற முதியோர், பெண்கள், குழந்தைகள்  சமூக இடைவெளியின்றி தரையில் அமர, நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளின் தன்மையறிந்து ஸ்கேன் மையத்தில் நோயாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டுமென நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>