×

வத்திராயிருப்பில் இ சேவை மையத்தில் கொரோனா அபாயம்

வத்திராயிருப்பு, ஏப். 16: கொரோனா 2வது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது.  வத்திராயிருப்பு பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க விழிப்பணர்வு பிரசாரம் செய்யாத நிலையில் 4 நாட்களுக்கு முன் திடீரென கடைகளில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் கடைக்காரர்களுக்கும், வருவாய்த்துறையினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கொரோனா அபராதம் விதிக்க வருவாய்த்துறையினர் வெளியே சென்று விடுவதால் வத்திராயிருப்பு பேரூராட்சியில் வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் முன்பு உள்ள இ சேவை மையத்தில் ஆதார் கார்டு புகைப்படம் எடுக்கவும், திருத்தம் செய்யவும், முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் செய்வதற்கும் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம், கூட்டமாக காத்திருக்கின்றனர்.

சமூக இடைவெளியின்றி மாஸ்க் அணியாமல் இவர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது பேரூராட்சி நிர்வாகம் செய்யவேண்டிய வேலை. அந்த பணியினை வருவாய் துறையினரை செய்ய வைத்துள்ளனர். அவர்கள் வெளியே சென்று விடுவதால் சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும் இ சேவை மையத்தில் ஆதார்கார்டு, பட்டா மாறுதலுக்கு வெவ்வேறு அறைகள் ஒதுக்காததால் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடுவதால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. இ சேவை மையத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Corona ,Vatri ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...