சிவகாமியம்மன் கோயில் திருவிழா ரத்து

சின்னமனூர், ஏப்.16:  கொரோனா இரண்டாவது அலை காரணமாக சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். இந்து அறநிலையத்துறையின் சார்பில் 18 மண்டகப்படிதாரர்கள் இணைந்து திருவிழாவை நடத்துவர். கடந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழக அரசு கோயில் திருவிழா நடத்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>