×

காளையார்கோவில் அருகே வேரோடு சாய்ந்த அரச மரம்


காளையார்கோவில், ஏப்.16: காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாய் கிராமத்தில் இருந்து மறவமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். சாலை ஓரமாக உள்ள கண்மாய் கரையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் ஒரு பகுதி பட்டுப்போனதோடு, ஒரு பகுதி பச்சையாகவும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த லேசான மழையில் இந்த மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இரவு நேரத்தில் சாய்ந்ததால் பொதுமக்களுக்கு வேறு எதுவும் சேதம் ஏற்படவில்லை. இதேபோன்று மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பரமக்குடி செல்லும் பொருசடிஉடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தொழில் நிறுவனங்கள் உள்ளன. காலை, மலை வேளைகளில் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்திலும் நடந்தும் அதிகமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மரங்கள் முறிந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு பட்டுப்போன மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...