போலீஸ் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

பரமக்குடி, ஏப்.16:  பரமக்குடியில் காவல்துறை சார்பாக எமனேஸ்வரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் காவல் நிலையம் சார்பில், அப்பகுதி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த கூட்டம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் முக கவசம், கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி வேல்முருகன் பேசுகையில், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. அவ்வாறு வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். வியாபார நிறுவனங்களில் கூட்டம் கூட விடாமல் தவிர்க்க வேண்டும். 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

Related Stories:

>