திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தெருக்கள் மூடப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திண்டுக்கல் நாகல்நகர், முனியப்பன் கோயில் சந்து, ரவுண்ட் ரோடு நாராயணதாஸ் நகர், ராஜீவ்காந்தி நகர் ஆகிய இடங்களில் மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியை சுற்றி மாநகராட்சி சார்பாக மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்துகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: திண்டுக்கல்லில் கொரோனா தொற்று குறைந்திருக்கும் என்று நம்பி இருந்தோம். தற்போது சோதனை செய்ய, செய்ய தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்படும். ஒரே குடும்பத்தில் பல பேர் இருப்பதால் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>