திருவண்ணாமலை அருகே பர்வதமலையில் வாலிபர் சடலம் மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

கலசபாக்கம், ஏப்.16: கலசபாக்கம் அடுத்த பர்வதமலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை அமைந்துள்ளது. பவுர்ணமி நாட்களில், தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பர்வதமலை மீது ஏறிச்சென்று, அங்குள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை பர்வதமலையில் இருந்து கடலாடி செல்லும் மலை பாதையில், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வழியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள், அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி டோலி கட்டி மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை மரத்தில் தொங்கவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>