×

408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் குடியாத்தம் தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப். 16: வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதால் அங்கு பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்கு மெஷின்கள் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் 364 வாக்குச்சாவடி மையங்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 769 வாக்குகளும், காட்பாடி தொகுதியில் 349 வாக்குச்சாவடி மையங்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 930 வாக்குகளும், அணைக்கட்டு தொகுதியில் 351 வாக்குச்சாவடி மையங்களில் 1 லட்சத்து 96ஆயிரத்து 146 வாக்குகளும், கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையங்களில் 1 லட்சத்து 72ஆயிரத்து 343 வாக்குகளும், குடியாத்தம் (தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்களில் 2 லட்சத்து 10ஆயிரத்து 187 வாக்குகளும் என மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகள் 73.98 சதவீதமாகும். இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை சுற்றுகள் வாக்கு எண்ணப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் தொகுதியில் 364 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளும், காட்பாடி தொகுதியில் 349 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளும், அணைக்கட்டு தொகுதியில் 351 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளும், கே.வி.குப்பம் தொகுதியில் 311 வாக்குக்சாவடிகளில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளும், குடியாத்தம் தொகுதியில் 408 வாக்குச்சாடிவகளில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாக எண்ணப்படும். மாவட்டத்தில் அதிகப்பட்சமாக குடியாத்தத்தில் 30 சுற்றுகளாகவும், குறைப்பட்சமாக கே.வி.குப்பம் தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்’ என்றனர்.

Tags : Gudiyatham ,
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...