நெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: நெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றப்பட்டதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தந்தை ஈ.வெ.ரா. பெரியார் சாலையின் பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று மாற்றப்பட்டு இருப்பதும், தொடர்ந்து அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையின் பெயர்களும் நெடுஞ்சாலைதுறை இணைய தளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இச்செயல் தமிழகத்தினுடைய மூத்த மறைந்த அரசியல் தலைவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்.

இதில் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இவற்றில் சம்பந்தம் இல்லை. இருந்த போதிலும் இதற்கு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடைய அஜாக்கிரதையான செயல்பாடுதான் காரணம். இந்த செயல்பாடு பலரது மனங்களை புண்படுத்தி இருக்கிறது. எனவே மீண்டும் சாலைகளின் பெயரை ஏற்கனவே இருந்ததுபோல வைக்க கூடிய நிலையை ஏற்படுத்தி, மறைந்த தலைவர்கள் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>