×

கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க கோரி கோவில்பட்டி நகராட்சியை மதிமுகவினர் முற்றுகை

கோவில்பட்டி, ஏப். 16: கோவில்பட்டியில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், நகர இளைஞரணி செயலாளர் லவராஜா, துணை செயலாளர் ராஜதுரை, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, செண்பகராஜ், நாகராஜ், முருகன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டனர். அவர்கள் நகராட்சி ஆணையர் ராஜாராமிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு வேலாயுதபுரம் தெருக்களில் உள்ள சாலைகள் புதுப்பிக்க போவதாக அறிகிறோம். வேலாயுதபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. சாலைகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டால், கழிவுநீர் அதில் தேங்கி வீணாகி விடும். எனவே, கழிவுநீர் கால்வாய்களை முதலில் செப்பனிட வேண்டும். அதன் பின்னர் புதிதாக சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Kovilpatti ,Madhyamakas ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா