சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கல்

சாத்தான்குளம் ஏப்.16: சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு சங்கத்தலைவர் லூர்து மணி கபசுர குடிநீர் வழங்கி துவக்கிவைத்தார். பஞ்.தலைவி திருக்கல்யாணி, சங்க  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அருள்ராஜ்  அமல்ராஜ் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கப்பட்டது. இதில்  நிர்வாகக் குழு உறுப்பினர் இருதயராஜ், சாஸ்தாவிநல்லூர் கிராம கமிட்டி  காங்கிரஸ் செயலாளர் மரியசெல்வஜெகன், தெற்கு வட்டார துணைத தலைவர் முத்துராஜ்,  கொழுந்தட்டு கிராம கமிட்டி பொறுப்பாளர் ராஜதுரை, சுப்பிரமணியபுரம் கிராம  கமிட்டி காங்கிரஸ் தலைவர் ஆசீர்,  செயலாளர் மில்டன், கொழுந்தட்டு இளைஞர்  காங்கிரஸ் தலைவர் நிஷாந்த் கவுன்சிலர் சாலமோன். தெற்கு வட்டார  மகிளா காங்கிரஸ் தலைவி பெல்சியா,  போலையர்புரம் கிராம காங்கிரஸ் கமிட்டி  தலைவர் தேவராஜ், சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் அந்தோனி தமிழ்செல்வன்,  சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க உறுப்பினர்கள் ஜஸ்டின். வெலிங்டன்,  டைட்டஸ், ஜெயக்குமார், சந்தனதிரவியம். அந்தோனிராஜ். ரூபேஷ்குமார், சீமான்,  சவரிமுத்து, ரூபன்  உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். சங்க துணைச் செயலாளர்  பென்சிகர் நன்றி கூறினார்.

Related Stories:

>