×

ஒரு நாளைக்கு 100 கேஸ் இலக்கு! கெடுபிடி போடும் ஆலங்குளம் டிஎஸ்பி

நெல்லை, ஏப். 16: முகக்கவசம் அணியாமல் சென்றால் 100 வழக்குகள் பதிய வேண்டும் என்று ஆலங்குளம்  டிஎஸ்பி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரையும் மைக்கில் அழைத்து  கூறும் ஆடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று  தினமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம்  முழுவதும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள்  மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல்துறை  சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த  இலக்கை எட்டுவதற்காக, கடந்த 8ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாத  நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிற்கும் 100 வழக்குகள் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 3 வழக்குகளும் தினமும் போடுமாறு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், அவரது  உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், பாவூர்சத்திரம்,  கடையம், ஊத்துமலை, சுரண்டை, வீ.கே. புதூர் ஆகிய ஸ்டேஷன்களின்  இன்ஸ்பெக்டர்களுக்கு, போன் செய்து வழக்கு விவரம் கேட்கிறார். ‘‘ஓபன் மைக்’ கில் பேசும் போது, ‘‘மாஸ்க் கேஸ்  எவ்வளவு போட்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார். அதற்கு ஒரு ஸ்டேஷன் பெண்  இன்ஸ்பெக்டர் 25 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக கூறுகிறார். உடனே அவரிடம்,  தினமும் மாஸ்க் கேஸ் 100 பதிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி கேஸ் கணிசமாக  இருக்க வேண்டும் என்றும், மேலிடத்திலேயே 100 கேஸ் போட வேண்டும் என்று  கூறுவதாகவும் கூறி கண்டிப்பான குரலில் கறார் காட்டுகிறார். அவர் மைக்கில்  பேசியது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது.

Tags : Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி