ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தயார்

கெங்கவல்லி, ஏப்.16: ஆத்தூர் சட்டசபை தொகுதிக்காக, தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,22,827 ஆண் வாக்காளர்கள், 1,31,796 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 இதர வாக்காளர்கள் என மொத்த 2,54,635 வாக்காளர்கள் உள்ளனர். ஆத்தூர் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கடந்த 6ம்தேதி நடந்த தேர்தலில் 95,432 ஆண்கள், 1,00,979 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர் என1,96,413 பேர் வாக்களித்தனர். வாக்குபதிவு முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் ஜெயமாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்க எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மையத்தில் 14 டேபிள் போடப்பட்டு, ஒரு ரவுண்டாக எண்ணிக்கை நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர், அவர்களின் முகவர்கள், செய்தியாளர்கள், வேட்பாளர்கள், அதிகாரிகள் பார்க்கும் அளவுக்கு இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது.

Related Stories:

>