×

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு போட்டி

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் திறன் வளர்ப்பு போட்டி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் மாணவர்களுடைய எழுத்துத் திறனை மேம்படுத்தும் வகையில், மாவட்டம் முழுதும் குறு வள மையத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களும், உயர் நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் பங்கேற்ற கட்டுரைப் போட்டி நடந்தது. பென்னாகரம் குள்ளனூர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரையான போட்டியில் பளிஞ்சரஅள்ளி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா முதல் பரிசும், பிக்கம்பட்டி பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ சாய்நிஷா 2ம் பரிசும், சின்ன பெரமனூர் பள்ளியைச் சேர்ந்த சத்ரியன் 3ம் பரிசும் பெற்றனர். அதேபோல், 9 முதல் 12 வகுப்புக்கு வரை நடந்த போட்டியில், குள்ளனூர் பள்ளியைச் சார்ந்த சத்யா முதல் பரிசும், சிவ பிரசாத் 2ம் பரிசும், மஞ்சநாயக்கனஹள்ளி பள்ளியை சேர்ந்த கௌசல்யா 3ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு டேப், செல்போன், கால்குலேட்டர் பரிசாக வழங்கப்படவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர் கோகிலா, பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர், குறுவளமைய ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா