அரூர் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தொண்டு வார விழிப்புணர்வு பிரசாரம்

அரூர், ஏப்:16: அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், தீத்தொண்டு வார விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், நேற்று நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், மாரியம்மன் கோயில் தெரு, நடேசா பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு வாரம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம்  மேற்கொள்ளப்பட்டது. அப்போது வணிக நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தீயணைப்பு சாதனங்களை நிறுவி, முறையாக பராமரிப்பு செய்து வந்தால், ஆரம்ப நிலையிலேயே வரும் தீ விபத்துக்களை தடுக்கலாம். வீடுகளில் காஸ் பயன்படுத்தி சமையல் செய்து முடித்தபின்பு, ரெகுலேட்டர் மற்றும் பர்னரை முழுவதுமாக மூட வேண்டும் போன்ற தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

Related Stories:

>