காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

கோவை, ஏப். 15: கோவையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் வடகோவை எப்.சி.ஐ குடோன் வளாகத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகளில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கருப்பசாமி, நிர்வாகிகள் கர்ணன், தண்டபானி, நாகராஜ், ஜெயபால், வசந்த், காந்தகுமார், கார்த்தி, பாசமலர் சண்முகம், சீனிவாசன், ரங்கநாதன், சுப்பு காமராஜ், ஜணார்தனம், சேக் சந்திரன், வார்க்கீஸ் ராமன், டென்னிஸ் செல்வராஜ், தமிழ்மணி, பாலசுப்ரமணி, எஸ்.சி பிரிவு சங்கர், ஸ்ரீதர், கிட்டுசாமி, விசிக நர்வாகிகள் சேகர், குரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>