திருவாரூரில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87 ஆயிரம் அபராதம்

திருவாரூர், ஏப்.15: கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு நோய்த்தொற்று விதிமுறைகள் மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. திருவாரூர் நகரில் மட்டும் நகராட்சியினால் இதுவரை 435 பேருக்கு தலா 200 வீதம் ரூ.87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மருத்துவமனைகள் என ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினராலும், சுகாதார அமைப்பினராலும் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவும், கட்டாயமாக முககவசம் அணியவேண் டும் என்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories:

>