திருவையாறு பகுதி சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

திருவையாறு, ஏப்.15: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியையும் வனங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். பக்தர்கள் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து புத்தாண்டை எல்லோரும் நோய் நொடி இல்லாமல் எல்லா செல்வம் பெற்று வாழவேண்டும் என்று இறைவனை வழிபட்டனர்.

ஐயாறப்பர் கோயிலிலிருந்து ஐயாற்றபர் அறம் வளர்த்த நாயகியுடன் வாகனத்தில் புறப்பட்டு கோயில் குளத்தில் சூலபாணிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர் வெண்ணை போன்ற திரவியங்களால் அபிேலுகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்த பிறகு சாமி நான்கு வீதிகள் வழியாக உலா வந்து சன்னதியை அடைந்தது. இதேபோல் திருவையாறை சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் ஆகிய 7 ஊர் சப்தஸ்தலங்களான சிவன் கோயில்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து சிவனையும், அம்மாளையும் வழிப்பட்டு சென்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவையாறில் உள்ள அனைத்து சிவன்கோயில்களிலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

More