பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

பேராவூரணி, ஏப்.15: பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை சார்பில், தீத்தொண்டு வாரம் ஏப்ரல்14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கடைபிடிப்பது வழக்கம். அதன்படி பேராவூரணி தீயணைப்பு நிலைய, அலுவலர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், சரவணமூர்த்தி உள்ளிட்டோர் தீத்தொண்டு வாரத்தையொட்டி பெரியார் சிலை மற்றும் கடைவீதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

திருவையாறு: திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் விழா கொண்டாடபட்டது. தீ மற்றும் மீட்பு பணியின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் தீயணைப்பு வீரர்களுக்காக தீ தொண்டு நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு திருவையாறு தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தில் தீயணைப்பின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>