×

அறந்தாங்கியில் பரபரப்பு சித்திரை மாத பிறப்பையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை, ஏப்.15: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சாமி தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். திருவரங்குளம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயில் பிடாரி அம்பாள் கோயில் ஆகிய இடங்களில் அர்ச்சனை செய்து தரிசனம் மேற்கொண்டனர். இதில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில், வேப்பங்குடி முருகன் கோயில், திருக்கட்டளை, திருமலைசமுத்திரம், திருவுடையார்பட்டி, உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலதானியத்தில் அடைக்கலங்காத்தார் கோயில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், தேனிமலை முருகன் கோயில், வையாபுரி முருகன் கோயில், பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில், அழகுநாச்சியம்மன் கோயில் பட்டமரத்தான் கோயில், நகரசிவன்கோயில், பெருமாள் கோயில் வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இலுப்பூர்: சித்திரை முதல்நாள் வழிபாட்டையொட்டி விராலிமலை சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானைக்கு பால்,தயிர்,தேன்,நல்லெண்ணெய், இளநீர்,பன்னீர்,சந்தனம் திரவியபொடி உள்ளிட்ட அபிஷேகபொருள்களினால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுப்பிரமணியார் வள்ளி தெய்வாளையுடன் அருள் புரிந்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீப ஆராதனை நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை படி பூஜை நடைபெற்றது. இதேபோல் விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags : Chittirai ,Aranthangi ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி