பொன்னமராவதியில் கோடைமழை தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம்

கறம்பக்குடி, ஏப்.15: கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>