களையெடுக்கும் பணி மும்முரம் பொன்னமராவதியில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

பொன்னமராவதி, ஏப்.15: பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஏப்.14ம் தேதி பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் வீர மரணத்தை நினைவு கூறும் வகையில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தீத்தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். இேதபோல புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories:

>