சாலையில் தோன்றிய கானல்நீர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூர், ஏப் 15: பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீயணைப்போர் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம்தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் தீ விபத்திற்கு உள்ளானது. அந்தக் கப்பலில் சுமார் 1,200 டன் வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்பு துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கப்பலில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறை சார்ந்த 66 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது தைரியமாக செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் நிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>