காரைக்காலில் ஒரேநாளில் 104 பேருக்கு தொற்று

காரைக்கால், ஏப்.15: காரைக்கால் மாவட்டம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 11பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. 13ம் தேதி 504 பேருக்கு பரிசோதனை செய்ததில் 104 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் 25, திருநள்ளாறில் 16, கோட்டுச்சேரி 14, திருப்பட்டினம் 14, நெடுங்காடு 12, வரிச்சிக்குடி 6, கோவில்பத்து 6, காரைக்கால்மேடு 5, நல்லம்பலி 3, அம்பகரத்தூர் 2, நிரவி ஒருவர் என 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Related Stories:

More
>