ஏமூர் நடுப்பாளையத்தில் பூட்டிக்கிடக்கும் நூலகம் செயல்பாட்டுக்கு வருமா?

கரூர், ஏப். 15: ஏமூர் நடுப்பாளையத்தில் பூட்டப்பட்ட நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், தாந்ேதாணி ஒன்றியம், ஏமூர் நடுப்பாளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2015ம் ஆண்டு முதல் நூலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களாக இந்த நூலகம் பூட்டப்பட்ட நிலை குறித்து அதிகாரிகள் கண்காணித்து சில வாரங்களாக செயல்படும் நிலைக்கு கொண்டு வந்தனர்.

தற்போது திரும்பவும் அவ்வப்போது நூலக கட்டிடம் பூட்டிய நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நூலகங்கள் உதவிடும் நிலையில், நூலக செயல்பாடு குறைவு காரணமாக அந்த பழக்கமும் நாளடைவில் குறைந்து விடும் என்பதால், நூலகம் எப்போதும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>