சோமூர் நெரூர் 3 வழி பிரிவு சாலையில் அடிக்கடி வாகன விபத்து பேரிகார்டு அமைத்து தடுக்க கோரிக்கை

கரூர், ஏப். 15: கரூர் மாவட்டம் சோமூர் நெரூர் பிரிவுச் சாலையில் விபத்தினை தடுக்கும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், ரெங்கநாதன்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும், சோமூர் நெரூர் பிரிவுச் சாலையில் சென்று பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்கின்றனர். 3 வழிகளில் இந்த பிரிவுச் சாலையில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

இதன் காரணமாக, இரவு நேரங்களில் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட இந்த சந்திப்பு சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெரூர் சோமூர் பிரிவுச் சாலையின் இருபுறமும் பேரிகார்டு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

More