வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சதுரங்க சாம்பியன்கள்: போல்கர் சவால் போட்டியில் வெற்றிபெற்று சாதனை

திருவள்ளூர், ஏப் 15: வேலம்மாள் பள்ளியின் சதுரங்க சாம்பியன்கள் போல்கர் சவால் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தார். முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா போல்கர் சவால் சதுரங்க சுற்றுப்பயணம் எனும் போட்டியில் ஒரு சுற்று மீதமுள்ள நிலையில், ஆன்லைன் பட்டத்தை வென்று ரொக்கப்பரிசாக ₹3 ஆயிரம் வென்றார். இந்தப்  போட்டியில் கலந்து கொண்டு ஆன்லைன் பட்டத்தை வென்றதன் மூலம் முதல் ஆன்லைன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் மாஸ்டர் பிராக்னானந்தா ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த உயரிய நிகழ்வான  மெல்ட்வாட்டர் சாம்பியன் செஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளார். மேலும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 9ம் வகுப்பு மாணவன் மாஸ்டர் டி.குக்கேஷ்,  இந்தப் போட்டியில் 3வது இடத்தைப் பிடித்தார். இந்த ஜூலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் சுற்றுப்பயணம் இளம் நட்சத்திரங்களுக்கு மைய அரங்கிற்குள் நுழையும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 4 சவால்களில் ஒன்றான ஜூலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற 19 போட்டியாளர்களையும் விரைவு சதுரங்கத்தில் எதிர்கொள்வர். சதுரங்கச் சாம்பியன்களின் சாதனைகளைப் பள்ளி தாளாளர் எம்விஎம்.வேல்மோகன் மற்றும் முதன்மை முதல்வர், முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>