×

இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர், ஏப். 15: உத்திரமேரூர் அருகே கைத்தண்டலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை இயற்கை வேளாண் பண்ணையில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில் செயல்படும் கற்பக விநாயகா கல்லூரி பி.டெக் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு  இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. எழில்சோலை சமூக அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் எழிலரசி வரவேற்றார். இயற்கை வேளாண் பண்ணையின் தாளாளர் மரம் மாசிலாமணி கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினார். ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாமில் பல்லுயிர் பெருக்கம், இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, பாரம்பரிய இயற்கை உணவு முறைகள் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, இயற்கையில் விவசாயம் செய்த பயிற்களை மாணவிகள் பார்வையிட்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : Natural Agriculture Awareness Camp ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...