×

தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது: மீன் விலை உயரும் அபாயம்

சென்னை: தமிழகம்  முழுவதும் மீன் பிடி தடைகாலம் துவங்கியது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 1983 விதிப்படி ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திருவள்ளுவர் வருவாய் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி வருவாய் மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலில் இழுவை வகை படகுகள் 28 குதிரை திறனுக்கு அதிகமான குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை கொண்ட படகுகள் மூலம் மீன்பிடிக்க தடையும், நாட்டுபடகுகள் குறைந்த குதிரை திறன் கொண்ட 28 குதிரை திறனுக்கு குறைவான குதிரை திறன் கொண்ட நாட்டு படகுகள், பைப்பர் படகுகள், கட்டுமரங்கள் கொண்டு மீன்பிடிக்க தடை இல்லை.

மீன்கள் இன பெருக்கத்துக்காக கிழக்கு கடற்கரையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்கள் இனப் பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிக விசைதிறன் கொண்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தடைக்காலம் அளிக்கப்படுகிறது. இதனால் மீன்களின் இனப் பெருக்கம் அதிகமாகி மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பது அரசின் முடிவு அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தொடங்கியுள்ள இந்த தடை காலத்தில் மீன்கள் விலை உயர கூடும் என்று மீன் பிரியர்கள் கூறுகின்றனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் வருவதால் விலை உயரக்கூடும். அரசுக்கு ஆண்டுதோறும் மீன்கள் விற்பனையால் ரூ.70 ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...