×

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளியை டிராக்டரில் கொண்டு சென்ற சோகம் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் இருந்தவர்


விருதுநகர், ஏப். 15:விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரியும், அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் பாதுகாப்பற்ற சூழலில் நடந்து வருகிறது. மேலும் கட்டுமான பணியில் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கடும் குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரை மணல் அள்ளும் டிராக்டரில் படுக்க வைத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால், அதே டிராக்டரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கட்டுமான நிறுவனத்திடம் கார், வேன் என பல வாகனங்கள் இருந்தும்,  மணல் அள்ளும் டிராக்டரில் படுக்க வைத்து அழைத்து சென்ற பரிதாப சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ேகாபமடைந்தனர்.  அரை கி.மீ தூரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று இருக்கலாம் என கேள்வி எழுப்பினர். நூற்றுக்காணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் கட்டுமான நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் கட்டுமான பணிகள் நடப்பதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Government Medical College ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...