விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகர், ஏப். 15: விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 1944ல் மும்பை துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 231 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒருவார காலத்திற்கு ‘தீ தொண்டு வாரம்’ அனுசரிக்கப்படும். அப்போது, தீ இடர் அதிகமுள்ள தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். நேற்று விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். கோட்ட அலுவலர் கணேசன் தலைமையில் உதவிக்கோட்ட அலுவலர் மணிகண்டன், நிலைய அலுவலர் கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>