சித்திரை பிறப்பையொட்டி கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு தரிசன வரிசையில் சமூக இடைவெளி ‘மிஸ்சிங்’

விருதுநகர், ஏப். 15: சித்திரை பிறப்பையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சித்திரை முதல் நாளான தமிழ் வருட பிறப்பையொட்டி நேற்று விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. விருதுநகர் மாரியம்மன் கோயில், சிவன் கோயில், பெருமாள் கோயில், ராமர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான மக்கள் அதிகாலை முதல் இரவு வரை கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களில் மாஸ்க் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வரிசையில் நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும், சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து நிறுத்தப்படாமல் இடைவெளியின்றி நெருக்கமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடை வீதிகளில் பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்கூடங்களில் புத்தாண்டு தினமாக நேற்று புதுக்கணக்கு போடப்பட்டது. இதேேபால் திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் நகரங்களிலும் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories:

>