உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை உறுதி வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

விருதுநகர், ஏப். 15: உரவிற்பனையாளர்கள் இருப்பு உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: விவசாய உரங்களான டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் விலை உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே யூரியா 2,254 மெ.டன், டிஏபி 693 மெ.டன், பொட்டாஷ் 775 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,215 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 136 மெ.டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில இருப்பில் உள்ளன.

இருப்பில் உள்ள உரங்களை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2020- 21ல் அரசு விற்பனைக்கு நிர்ணயம் செய்த விலையிலையே தற்போதும் டி.ஏ.பி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை பிஓஎஸ் மெஷின்கள் மூலம் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதிட வேண்டும். விவசாயிகள் உரங்களை வாங்கும் போது உர மூட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு, உரிய ரசீது பெற வேண்டும். இருப்பு விபரங்கள் கடைகளில் சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>